தமிழகம்

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் திமுகவுக்கு எந்த பாதகமும் இல்லை: ஸ்டாலின்

செய்திப்பிரிவு

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் திமுகவுக்கு எந்த பாதகமும் இல்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம். யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் திமுகவுக்கு எந்த பாதகமும் இல்லை

முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து சுமுகமான முறையில் பேச்சு நடைபெற்றது. இன்னும் இரண்டொரு நாளில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோருடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறும்.

திமுக தனது தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக தொடர் முயற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT