தமிழகம்

சென்னையில் நட்சத்திர கிரிக்கெட்: ரஜினி, கமல் பங்கேற்பு - பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு

செய்திப்பிரிவு

சென்னை சேப்பாக்கத்தில் நடை பெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உட்பட முன்னணி நடிகர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு கேட்டு நடிகர் சங்கம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நிர் வாகிகள் நேற்று மதியம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து, காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து ஒரு மனுவைக் கொடுத்தனர். பின்னர் நிருபர்களிடம் நாசர் கூறியதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதா னத்தில் ஏப்ரல் 17-ம் தேதி இந்த போட்டி நடத்தப்படும்.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் மும்பை, ஆந்திரா கர்நாடகாவில் இருந் தும் பிரபலமான நடிகர்கள் இந்த போட்டியை காணவும், போட்டியில் பங்கேற்கவும் வரு கின்றனர். இப்போட்டிக்கு பாது காப்பு கொடுக்கும்படி காவல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நாசர் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் என்.சீனிவாசனை சந்தித்து சேப் பாக்கம் மைதானத்தில் போட்டியை நடத்துவதற்கான அனுமதியை வாங்கினர்.

6 ஓவர்கள்

இப்போட்டி குறித்து நடிகர் ரமணா கூறும்போது, “நட்சத்திர கிரிக்கெட் 6 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும். காலை யில் இருந்து இரவு வரை போட்டிகள் நடத்தப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT