தமிழகம்

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்

ஆர்.சிவா

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்:

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல்ஹக், சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு எஸ்.பி., ரோஹித் நாதன், சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நிர்வாகப்பிரிவு ஏஐஜி செல்வக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT