தமிழகம்

கோயில் நகைகளை உருக்க 6 வாரங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை

செய்திப்பிரிவு

சென்னை: கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்குவது தொடர்பாக, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு தலைமை (பொ) நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேச வலு கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, ‘‘அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நகைகளைக் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார். இவ்வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்குத்தள்ளிவைத்த நீதிபதிகள், ‘‘கோயில் நகைகளைக்கணக்கெடுக்கும் பணி தொடரலாம். ஆனால், நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது’’ என்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT