தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித் துறையின் முதன்மை தலைமை ஆணையராக கீதா ரவிச்சந்திரன் நேற்று பதவி ஏற்றார்.
இவர் இந்திய வருவாய்ப் பணியில் கடந்த 1987-ம் ஆண்டு சேர்ந்தார். தேசிய நேர்முக வரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று சென்னை, மும்பை, நாக்பூர், பெங்களூரு மற்றும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பணியாற்றி இருக்கிறார்.
அவரின் 34 வருட நீண்ட அலுவலக பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்திருக்கிறார். வருமானவரித் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.