தமிழகம்

தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தேர்தல் ஆணையம் கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னை விமானநிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தால் கட்சிகள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யமுடியவில்லை.

மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக எடுத்துச் செல்கிற அரசியல்வாதிகளை அல்லது அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணமுடியவில்லை. அந்தப் பணத்தை தேர்தல் ஆணையத்தால் பறிக்க முடியவில்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது.

தேர்தல் ஆணையம் வெறுமனே தேர்தலை நடத்துகிற ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கிறதே தவிர, சட்டம்- ஒழுங்கை கட்டுப்படுத்தவோ அல்லது சமூக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவோ வலிமையுடையதாக இல்லை.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT