தோழர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் கைவிட்டதில்லை என்று அக்கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஜூன் 10-ம் தேதி வெளியான `தி இந்து’வில் டேப்காதர் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ‘டேப் காதர்’ 1950-களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துள்ளார். 1959-ல் பம்பாய் சென்றுள்ளார்.
அதற்கு பிறகு 1967-களில் மார்க்சிஸ்ட் கட்சியில் சில ஆண்டுகள் இருந்தார். மீண்டும் மகாராஷ்டிரம் சென்று தொழில் செய்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தொடர்பு இல்லை.
4 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தோழர் இவரை அழைத்து வந்தார். சில மாதங்கள் தஞ்சை கட்சி அலுவலகத்தில் தங்கியிருந்தார். பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவராகவே அலுவலகத்திலிருந்து சென்றுவிட்டார்.
கட்சிக்காக உழைத்தவர்களை மார்க்சிஸ்ட் கைவிட்டதில்லை. எதிர்காலத்திலும் கைவிடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.