தமிழகம்

முஸ்லிம் மக்களின் 5% இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின் உறுதி

செய்திப்பிரிவு

முஸ்லிம் மக்களின் 5% இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் ஸ்டாலின் பேசியதாவது: திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது முஸ்லிம்களின் குறைகளுக்காக போராடியது. ஆளும் கட்சியாக வந்தபின் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் சிறுபான்மை நலவாரியம் அமைக்கப்பட்டது. அதற்கான சட்ட அங்கீகாரத்தையும் வழங்கினார். சிறுபான்மையினருக்கு அரசு வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திட்டங்கள் முழுமையாக சேரு வதற்கு முதன்மை செயலர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டது. ஜெய லலிதா முதல்வராக வந்த பின்பு இதை செயல்படாமல் தடுத்தார். நபிகள் நாயகம் பிறந்தநாளை அரசு விடுமுறையாக திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. சிறுபான்மை சுயநிதி பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் உள்ளிட்ட 5,499 பேருக்கு அரசு ஊதியம் வழங்க அறிவிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் 6,456 பணியிடங் களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் முஸ்லிம்களுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு வேண் டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்களை மீண்டும் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். கடந்த 5 ஆண்டுகால ஆட்சி எதையும் செய்யவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில், பல திட்டங் களை அறிவித்துள்ளனர். தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந் தும், ஊழலில் முதலிடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள் ளது. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன், மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், முன்னாள் அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திண்டிவனத்தில் நேற்று ஒரு திருமண விழாவில் பங்கேற்று ஸ்டாலின் பேசும்போது, “திராவிட இயக்கத்தால் வளர்ந்தவர்கள் அதை அழிக்க புறப்பட்டுவிட்டார் கள். வரும் தேர்தலில் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமையும் என்பது உறுதி” என பேசினார்.

SCROLL FOR NEXT