தமிழகம்

சூரிய ஒளி மூலம் 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசு இலக்கு

செய்திப்பிரிவு

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் சாரம் தயாரிப்பதில் உள்ள சிக்கல் கள் மற்றும் சவால்கள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமையின் பொதுமேலாளர் (டெக்னிக்கல்) ஏ.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

மாற்று எரிசக்தி குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 1984-ம் ஆண்டு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமையை நிறுவியது. மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின் றன. நாடு முழுவதும் மாற்று எரிசக்தி திட்டங்கள் மூலம் 32 ஆயிரத்து 730 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரத்து 326 மெகாவாட் மின்சாரம் உற் பத்தி செய்யப்படுகிறது. வீடு களின் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

வீட்டின் மேற்கூரையில் 1 கிலோவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.47 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. இதில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. தமி ழக அரசு நடப்பாண்டில் சூரிய ஒளி மூலம் 350 மெகாவாட் மின் சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 80 மெகா வாட் உற்பத்தித் திறன் எட்டப்பட் டுள்ளது. அரசு கட்டிடங்களில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களை நிறுவ நபார்டு வங்கி மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளின் மேற்கூரை களில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு வீட் டுக்கு 1 கிலோவாட் வீதம் 1 லட்சத்து 76 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதேபோல், சூரிய ஒளி மின்சாரம் மூலம் 20 ஆயிரம் தெரு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

கருத்தரங்கில் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே.வேணுகோபால், டிலாய்ட் டச் தோமத்சு இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர் வேதமூர்த்தி நமச்சிவாயம், கமேசா விண்ட் டர்பைன் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் கே.வி.சஜாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT