தமிழகம்

13 கோட்டங்களில் பாஜக நேர்காணல்

செய்திப்பிரிவு

பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தமிழகம் முழுவதும் 13 கோட்டங்களில் நேற்று தொடங்கியது.

பாஜக சார்பில் போட்டியிட விரும்பு பவர்களிடமிருந்து கடந்த 4, 5-ம் தேதி களில் விருப்ப மனுக்கள் பெறப் பட்டன. 234 தொகுதிகளுக்கும் 3 ஆயிரத் துக்கும் அதிகமானோர் போட்டியிட விருப்பம் தெரிவித்தி ருந்தனர்.

இதையடுத்து வேட்பாளர் தேர்வுக் கான நேர்காணல் நேற்று நடந்தது. பாஜக அமைப்பு ரீதியாக உள்ள 42 மாவட்டங்களும் 13 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 13 கோட்டங்களிலும் நேற்று நேர்காணல் தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் (சென்னை), மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் (திருச்சி), மூத்த தலைவர் இல.கணேசன் (கன்னியாகுமரி), தேசியச் செயலாளர் எச்.ராஜா (ஈரோடு) உள்ளிட்டோர் நேர்காணலை நடத்தினர். இதில் பங்கேற்றவர்களிடம் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உண்டா, வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு செலவு செய்ய முடியும், உங்கள் தொகுதியில் கட்சியின் செல் வாக்கு எப்படி உள்ளது, எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர விரும்பு கிறீர்கள் என்பன உள்ளிட்ட கேள்விகள் மற்றும் ஜாதி உள்ளிட்ட சமூகப் பின்னணி குறித்தும் கேட்கப்பட்டன.

இன்றும் நேர்காணல் நடக்கிறது. இதையடுத்து ஒவ்வொரு தொகு திக்கும் 3 முதல் 5 பேர் கொண்ட பட்டியலை மாநிலத் தலைமையிடம் அளிப்பார்கள் என பாஜக மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT