அரசியல் கட்சிகள் திருநங்கைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க முன்வருவது காலத்துக்கு தேவை யான நல்ல மாற்றம் என திருநங்கை பாரதி கண்ணம்மா தெரிவித்தார்.
கடந்த மக்களவை தேர்தலில் மதுரையில் சுயேச்சையாக போட்டி யிட்ட பாரதி கண்ணம்மா, அதன் பிறகு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தார். தற் போது அதிலிருந்து விலகிவிட்ட நிலையில், அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி சார்பில் போட்டியிட பாரதி கண்ணம்மாவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
திருநங்கைகளின் பிரதிநிதியாக பொதுக்குழுவில் என்னை பேச அனு மதிக்காததால் சமகவில் இருந்து விலகினேன். பாமக தரப்பில் சென் னையில் போட்டியிட வாய்ப்பளிப்ப தாக சொன்னார்கள். ஆனால், ஜாதி ஆணவக் கொலைகள் விஷயத்தில் அவர்களின் நிலைப்பாடு சரியில்லை என்பதால் அக்கட்சி சார்பில் போட்டி யிட எனக்கு விருப்பம் இல்லை.
அப்துல் கலாம் லட்சிய இந்தியா உள்ளிட்ட கட்சிகள் என்னோடு பேசிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.
ஊழலில் திளைத்த திமுகவும் அதிமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதுதான். ஆனால், இது இல்லாவிட்டால் அது என மாறி மாறி அவர்களையே ஆட்சியில் அமர்த்துகிறோம். இப்போதுகூட, ஆட்சிக்கு எதிரான 65 சதவீத வாக்குகள் சிதறிக் கிடப்பதால் மீண்டும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும் சூழல். இதை நினைக்கும்போதுதான் ஜனநாயகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஓட்டை இருக்கிறதே என வலிக்கிறது.
திருநங்கை தேவிக்கு சென் னையில் போட்டியிட சீமான் வாய்ப்பு அளித்திருக்கிறார். திருநங்கை ராதி காவுக்கு சேலத்தில் வாய்ப்பு அளிப்பதாக தேமுதிக உறுதி அளித் திருக்கிறது. திருநங்கை சுதா அதிமுகவில் வாய்ப்பு கேட்டு ஜெய லலிதாவிடம் மனு கொடுக்க இருக் கிறார். தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்பட்ட திருநங்கைகளை அரசியல் கட்சிகள் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருப்பது காலத்துக்கு தேவையான நல்ல மாற்றம். இவ்வாறு அவர் கூறினார்.