தமிழக மீனவர்கள் 65 பேரின் நீதி மன்ற காவலை மன்னார், ஊர்காவல் துறை நீதிமன்றங்கள் மீண்டும் நீட்டித்துள்ளன.
ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து பிப்ரவரி 10-ம் தேதி கடலுக்குச் சென்ற கிளாஸ் டன், கஸ்தூரி சேதுராமன் ஆகி யோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளை இலங்கை கடற்படை யினர் கைப்பற்றினர். அதில் இருந்த 12 மீனவர்களை கைது செய்தனர். மார்ச் 6-ம் தேதி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 9 பேரை யும், மார்ச் 14-ம் தேதி தலைமன் னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 23 பேரையும் சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் 44 பேரின் நீதிமன்ற காவல் வியாழக்கிழமை யோடு முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட் டனர். அவர்களுக்கு ஏப்ரல் 4-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு வவுனியா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.
மீனவர்கள் அதிர்ச்சி
இதேபோல் ஜனவரி 31-ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட கோட்டைப் பட்டினம் மீனவர்கள் 9 பேர், மார்ச் 3-ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட கோடியக்கரை, தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர், மார்ச் 10-ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் என 21 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
21 மீனவர்களின் காவல் வியாழக் கிழமையோடு முடிவடைந்த தால் மீண்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட் டனர். இவர்களது காவல் நீட்டிக் கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக் கப்பட்டனர்.
இலங்கை சிறைகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் உட்பட மொத்தம் 96 தமிழக மீனவர்கள் நேற்று (வியாழக் கிழமை) விடுதலை செய்யப் படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், இலங்கை நீதிமன்றங்கள் மீண்டும் காவல் நீட்டிப்பு செய்திருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுகை மீனவர்கள் 3 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சுமார் 190 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றுள்ளனர். அதில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வன், சக்திவேல், ஜீவா ஆகியோரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.