தமிழகம்

திண்டுக்கல் தேமுதிக கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், முதலில் களம் கண்ட திண்டுக்கல் என்பதால் அந்த சென்டிமென்டை மனதில் கொண்டு, தேமுதிக சார்பில் மார்ச் 30-ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு நடக்கிறது. இதற்கான அனுமதி கோரி, எஸ்பி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். இக்கூட்டத்தில் மகளிர் அணி தலைவர் பிரேமலதா பங்கேற்கிறார். கடைசி நேரத்தில் விஜயகாந்தும் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில், தென்மாவட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் அறிவித்தபிறகு, தென் மாவட்டங்களில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதாலும், தேமுதிக தனது நிலையை மாற்றிக் கொள்ளும் என திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக கருதி வருவதாலும், திண்டுக்கல்லில் மார்ச் 30-ல் நடக்கும் தேமுதிக பொதுக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT