மருத்துவமனைகளில் யாராவது உயிரிழக்கும்போது, “அரைமணி நேரத்துக்கு முன்பே கொண்டு வந்திருந்தால் பிழைத்திருப்பார்” என மருத்துவர் கள் கூறும்போதுதான் ‘கோல்டன் ஹவரின்’ அருமையும், அதன் அவசியமும் புரியும். பொதுவாக விபத்துகளில் பாதிக்கப்படுபவர் களின் உயிரைக் காக்க, விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து மருத்துவ மனைக்குச் சென்றடையும் நேரத்தை ‘கோல்டன் ஹவர்’ என்று கூறுகிறோம். உண்மையிலேயே உயிரைக் காப்பாற்றுவதில் அது பொன்னான நேரம்தான்.
விபத்தில் சிக்கி உடனடியாக இறப்பவர்களைவிட, முதலுதவி கிடைக்காமல் இறப்பவர்களே அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரி விக்கின்றன. சாலை விபத்தில் சிக்கி ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் அதை பார்த்து நிற்பவர்களைவிட, பார்க்காதது போல் செல்பவர்கள் அதிகமாகி விட்டனர். விபத்தில் சிக்கி இருப்ப வர்களுக்கு யாரேனும் முன்வந்து உதவலாம், அவர்கள் மீது சட்டப் படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாது என மத்திய அரசு அறிவித் துள்ளது. ஆனாலும், மக்களிடையே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு காப்பாற்ற தயக்கம் நீடிக்கிறது.
இதுதொடர்பாக சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவில் ஆக்ஷன் குரூப் (சிஏஜி) என்ற அமைப்பின் இயக்குநர் (ஆலோசகர்) எஸ்.சரோஜா, ஆய்வாளர் சுமனா நாராய ணன் ஆகியோர் கூறியதாவது:
சாலை விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் இருக்கும் போக்குவரத்து போலீ ஸார் சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் சிக்கியவரைக் காப் பாற்ற, ஆம்புலன்ஸுக்காக காத் திருக்காமல், அங்கு வரும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி, அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும். இந்த விஷயத்தில், உதவி செய்யும் ஆட்டோ ஓட்டுநர் அல்லது பொதுமக்களை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், விபத்து ஏற்பட்டு ஒரு மணிநேரத்துக்குள் அவசர மருத் துவ உதவி பெற முடியாமல் ஏராளமானோர் இறக்கிறார்கள்.
ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால், முறையாக வழிவிட முடியாமல் மற்ற வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர். இன்னும் சிலரோ ஆம்புலன்ஸ் பின்னாலேயே வேகமாக சென்று விடலாம் என்று எண்ணி ஓட்டிச் செல்கின்றனர். இது தவறு. ஆம்பு லன்ஸ் செல்லும்போது சாலையில் எவ்வாறு வழிவிட்டு செல்வது என்பது பற்றி குறும்படம் ஒன்றை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்தின் வேலைகள் இறுதிகட்டத் தில் இருக்கிறது. அடுத்த ஓரிரு வாரங்களில் அதை வெளியிடவுள் ளோம். சமூக வலைதளங்களிலும் இது வெளியிடப்படும். விபத்து ஏற்பட்டவுடன் சம்பந்தப்பட்டவரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித் தால் 50 சதவீத உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
அவசர வாகனத்துக்கு தனிப்பாதை
போக்குவரத்து நெரிசலில் ஆம்பு லன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் போன்ற அவசரமாக செல்லும் வாகனங் கள் சிக்கிவிடுகின்றன. இது உயிரி ழப்புக்கு முக்கிய காரணமாக இருக் கிறது. எனவே, மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய பெரிய நகரங்களில் அவசர வாகனங்கள் செல்ல தனிப்பாதைகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சமாக பஸ் களுக்காக தனிப்பாதை அமைத்து, அதில் அவசர வாகனங்களையும் அனுமதிக்கலாம். இதனால் விபத்து கள் குறைவதுடன் போக்குவரத்து நெரிசலும் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.