''தலைவா! தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்'' என்று ரஜினிக்கு சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1975-ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரஜினிகாந்த் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் மிளிர்கிறார். அவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ரஜினிகாந்துக்கு இன்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று விடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
''ரஜினிகாந்த் சார், பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா. தங்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்காக எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன்''.
இவ்வாறு சச்சின் தெரிவித்துள்ளார்.