ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை வரும் ஜன.31-க்குள்தாக்கல் செய்ய வேண்டும் என்றுதலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் சார்பில், ஆண்டுதோறும் ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்கள், உரிய படிவத்தில் பதிவு செய்யும்படி கோரப்படும். அந்த வகையில் இந்தாண்டும் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர், மத்தியஅரசின் அறிவுறுத்தலை குறிப்பிட்டு, தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் செயலர் அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு பரிந்துரைத்துள்ள படிவத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்கள் முழு சொத்துவிவரங்களை அளித்து, ஆண்டுஅறிக்கையை அளிக்க வேண்டும்.பரம்பரை சொத்து, கையகப்படுத்தப்பட்டது, குத்தகை பெற்றது, அடமானத்தில் உள்ள சொத்து விவரங்கள் குறி்ப்பிடப்பட வேண்டும்.
அவரது பெயரிலோ அல்லதுஅவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ உள்ள சொத்து உள்ளிட்டவிவரங்களையும் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அடுத்தாண்டு ஜன 31-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்க தவறினால் ஒழுங்குநடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2017-ம்ஆண்டு முதல் மத்திய அரசுஇணையதளம் மூலம் சொத்துவிவரங்களை சமர்ப்பிக்கும்வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதால், அதன் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம். அடுத்தாண்டு ஜன.31-ம்தேதியுடன் இந்த வசதி நிறுத்தப்பட்டுவிடும். எனவே குறிப்பிட்ட நாளுக்குள் விவரங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.