மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த 2 ஒப்பந்த ஊழியர்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ஒரு பெண் மருத்துவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோய்க்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்காக பாலரெங்காபுரத்தில் ரூ.20 கோடியில் அதிநவீன கதிரியக்க இயந்திரங்களுடன் மண்டல புற்று நோய் சிகிச்சை மையம் செயல் படுகிறது.
புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அதற்காக கமிஷன் பெறும் செயலில் சில ஊழியர்கள் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் காப்பீட்டுத் திட்ட வார்டு மேலாளர் சார்லஸ், ஆய்வக நுட்பநர் அரு ணா ஆகியோரை டீன் ரெத்தி னவேலு நேற்று முன்தினம் பணி நீக்கம் செய்தார்.
இந்த விவகாரத்தில் அவர் களுக்கு மூளையாக செயல்பட்ட கதிரியக்கத் துறை பெண் மருத் துவர், மருத்துவமனையின் வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.
குறிப்பிட்ட தனியார் மருத்துவ மனை அந்த பெண் மருத்து வருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இதுபோல் புகார் வரும்போது கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு பிரச்சினை முடிந்து விடுகிறது. இதனால் இடைத்தரகர்களை ஒழிக்க முடியவில்லை.
எனவே, இதில் தொடர்புடைய மருத்துவர்கள், உயர் அதிகாரிகள், தனியார் மருத்துவமனைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.
இது குறித்து டீன் ரெத்தின வேலுவிடம் கேட்டபோது, "சம்பந் தப்பட்ட பெண் மருத்துவர், இணைப் பேராசிரியர் என்பதால் அவர் மீது சுகாதாரத் துறை நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது" என்றார்.
அரசு மருத்துவமனையில் நடை பெறும் முறைகேட்டின் பின்னணி குறித்து மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியதாவது: அரசு காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் அரசு மருத் துவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் குழுவினருக்கு 15 சதவீதம் ஊக்கத் தொகையும், மருத்துவமனையின் வளர்ச்சிக்கு நேரடி நிதியாக 25 சதவீதம் பயன்படுத்திக் கொள்ளவும் தமி ழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அரசாணை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் அரசு மருத்து வமனைக்கு வரும் நோயாளிகள், இடைத்தரகர்களால் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் அரசு மருத்துவக் காப்பீட்டு நிதி, தனி யார் மருத்துவமனைகளுக்கு வருமானமாக சென்று விடு கிறது. இதனால் அரசு மருத்து வமனைக்கு வரவேண்டிய பணம் கிடைக்காமல், மேம்பாட்டுப் பணி களை மேற்கொள்வதில் சிக்கல் எழுகிறது.
மதுரை அரசு மருத்துவ மனையில் புற்று நோய் சிகிச் சைக்கு அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோயா ளிகளிடம் சில அரசு மருத்து வமனை ஊழியர்கள், இங்கு சிகிச் சை தரமானதாக இருக்காது எனக் கூறி மாதம்தோறும் நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அந்த நோயாளிகளிடம் மருத் துவக் காப்பீட்டு நிதி போக மருந் துகள், படுக்கை கட்டணம் என்று கூடுதலாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலிக் கப்படுகிறது. இடைத்தரகராக செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் கமிஷனாக வழங்கப்படுகிறது.
இதுபோல் அரசு மருத்துவ மனையில் இடைத்தரகர்களாக செயல்படும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.