தமிழகம்

அமைச்சர் சி.வெ.கணேசன் குடும்பத்தினருக்கு முதல்வர் நேரில் ஆறுதல்

என்.முருகவேல்

விருத்தாசலத்தில் வசித்து வந்த அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி பவானியின் (54) உயிரிழந்ததை தொடர்ந்து அமைச்சர் கணேசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசனின் மனைவி பாவனி(54) விருத்தாசலத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த 9-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் உள்ளிட்டப் பலர் நேரில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பவானி உயிரிழப்பின் கோவையில் இருந்த முதல்வர், அப்போது வர இயலாததால், இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று விருத்தாசலத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, பவானியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அமைச்சர் கணேசன், அவரது மகன் வெங்கடேசன் உள்ளிட்டக் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

அவர்கள் சென்ற பின் தொமுச பேரவைச் செயலாளர் மு.சண்முகம், தலைவர் நடராஜன் உள்ளிட்டோரும் அமைச்சர் கணேசனை சந்தித்து ஆறுதல் கூறினர்.

SCROLL FOR NEXT