பாகூர் அருகே கொம்மந்தான்மேடு தடுப்பணையின் கரை மற்றும் இணைப்பு சாலை உடைந்து பலஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில்கலந்து வருகிறது.
புதுச்சேரி - தமிழக பகுதிகளை இணைக்கும் வகையிலும், நிலத்தடி நீரை உயர்த்தும் நோக்கிலும் பாகூர்அடுத்த கொம்மந்தான்மேடு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 2010-ம் ஆண்டு, தரைபாலத் துடன் கூடிய படுகை அணையை புதுச்சேரி அரசு கட்டியது.
கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அணையின் தற்காலிக இணைப்பு சாலை நீரில்அடித்துச் செல்லப்பட்டு, தரைப்பா லம் சேதமடைந்தது. அதன் பின்னர் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறை சார்பில், ரூ.4 கோடியே 11 லட்சத்து 49 ஆயிரத்து 386 நிதி ஒதுக்கீடு செய்து, இந்த அணை சீரமைக்கப்பட்டு, தார் சாலையுடன் இணைக்கப்பட்டது. புதுச்சேரி-கடலூர் இடையேயான போக்குவரத்தும் தொடங்கியது.
சமீபத்தில் பெய்த கனமழையில் தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொம்மந்தான் மேடு படுகை அணை நீரில் மூழ் கியது.
தடுப்பணையின் கரையும், இணைப்பு சாலையின் இருபுறமும் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதன் காரணமாக இருபுறமும் கரையின் பிடிமானம் இல்லாமல் படுகை அணை துண்டாக நின்றது. மேலும் கொம்மந்தான்மேடு பகுதியில் சுமார் 50 மீட்டர் நீளத்துக்கு தார் சாலை, வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் உடைந்தது.
இதேபோல் மறுகரையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலம் எதிரே உள்ள கரையில் ஏற்பட்ட அரிப்பால் பேருந்து நிறுத் தத்திற்கான நிழற்குடை சரிந்து ஆற்றில் விழுந்தது.
தார்சாலையும் சேதமடையும் சூழல் உருவானது. இதன் மூலம் தரைப்பாலத்தில் போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம், ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கரைப்பகுதியை பலப்படுத்த கருங்கல், ஜல்லி மற்றும் மணல் மூட்டைகளை கொட்டிபாதுகாத்து வருகின்றனர். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ளகரை பாதுகாப்பு செய்யப்பட் டுள்ளது.
ஆனால் புதுச்சேரி கொம்மந் தான்மேடு பகுதியில் உள்ள கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து பல ஆயிரம் கன அடிநீர் வெளியேறி வீணாக கடலில் கலந்து வருகிறது. அணையின் கரையும், இணைப்பு சாலையுடன் கூடிய தார்சாலையும் மேலும் உடைந்து வருகிறது. தொடர்ந்து ஆற்றில் நீர்வரத்து உள்ளதால், படுகை அணை ஈடு கொடுத்து தாக்கு பிடித்திருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள் ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘மழை விட்டு 10 நாட்கள் கடந்த நிலையிலும், படுகை அணையின் கரை உடைந்துவெளியேறும் தண்ணீரை பாது காக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் யாரும் நேரில் பார்வையிடவில்லை. தொடர்ந்து படுகை அணையின் பக்கவாட்டில் தண்ணீர் வெளியேறுவதால் மண்அரிப்பு ஏற்பட்டு அணை சேதமடை யும் அபாயம் உள்ளது. எனவே விரைந்து உடைந்த கரை மற்றும் இணைப்பு சாலை பகுதியை சரிசெய்து தண்ணீரை தேக்கி வைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்கின்றனர்.
இது குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை உயரதிகாரியிடம் கேட் டபோது, ‘‘செயற்பொறியாளரை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
இன்னும் இரண்டு நாட்களில் உடைந்த கரைகளை சரி செய்துவிடுவார்கள். படுகை அணை சேதமடைய வாய்ப்பு இல்லை.காங்கிரீட் ஆழமாக போடப்பட்டுள் ளது. புதிதாக படுகை அணையின் இருபுறமும் மேலும் 10 மீட்டர் நீளத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் போடாமல் விட்டு விட்டனர். இப்பணி விரைவில் மேற்கொள்ளப்படும்.’’ என்று தெரிவித்தனர்.