திருநெல்வேலி தச்சநல்லூரில் திமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி. பேசும்போது, ‘தமிழகம் முழுவதும் திமுக மகளிரணியைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்து அதிமுக அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்து சொல்வார்கள்.
கடந்த 5 ஆண்டுகள் அதிமுக அரசால் மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்துள்ளனர். குடிநீர், ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை. மாறாக மதுவை தாராளமாக வழங்கினர். தமிழகத்தில் மதுவால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் குரலை அதிமுக அரசு மதிக்கவில்லை. சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் மதுவிலக்கு தொடர்பாக கருணாநிதி முதல் கையெழுத்திடுவார்’ என்றார்.