தமிழகம்

தமிழகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ''தமிழகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி உள்ளது. வீடு தேடித் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் சிறப்பாகச் செயல்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் செயல்படுகிறது. கல்லூரிகளுக்குள்ளும் தடுப்பூசி முகாம்கள் அமைக்க அனுமதி அளித்துள்ளோம்.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், ஐஐடியில் 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை முதல் தவணை 46%, இரண்டாவது தவணை 12% போடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு டோஸ் போட்டுக் கொண்டாலே கல்லூரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT