தமிழகம்

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில்‌ பொதுவாக வறண்ட வானிலையும்‌, ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

நாளை கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில்‌ பொதுவாக வறண்ட வானிலையும்‌, ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக் கூடும்‌.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT