பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியைக் குறைக்க வேண்டும், மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் இழப்புக்கு ஹெக்டேருக்கு ரூ. 40 ஆயிரமும், மறு சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 12 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம்வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்கை மூடக் கூடாது, கட்டுமானப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் டிசம்பர் 9-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டு டிச.11-ம் தேதி காலை 11 மணிக்குநடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.