தமிழகம்

முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்: முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

முப்படை படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை 1:00 மணி வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கிழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தெரிகிறது.இந்த விபத்தில் 7 பேர் இறந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்படரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்திருக்கிறார் என்று இந்திய விமான படை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டிருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன். மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நான் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்

SCROLL FOR NEXT