கோப்புப் படம் 
தமிழகம்

நீலகிரியில் ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்து: 3 வீரர்கள் பலி?

செய்திப்பிரிவு

நீலகிரி மாவாட்டம் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று காலை 1:00 மணி வானிலை பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கிழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக தெரிகிறது.

இந்த விபத்தில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆட்சியர் அப்ரித் கூறியுள்ளதாவது:

"விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்ததாகவும், இதில் மூன்று பேர் படுகாயங்களுடன் நீலகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேறு 3 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீர் வானிலை மாறுபாடு காரணமா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினை காரணமா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை."

இவ்வாறு ஆட்சியர் அப்ரித் கூறியுள்ளார். இதனிடையே ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT