தமிழகம்

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை?- வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடலூர்‌, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதுகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும். உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

நாளை அரியலூர்‌, பெரம்பலூர்‌, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில இடங்களில்‌ அதிகாலை நேரங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT