தமிழகம்

அதிமுக அணியில் தமிமுன் அன்சாரி

செய்திப்பிரிவு

மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மஜக தொடங்கப்பட்ட 4-வது நாளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில், எங்களின் முதல் அரசியல் மாநாட்டை சென்னை துரைப்பாக்கத்தில் சனிக்கிழமை நடத்துகிறோம்.

இந்த தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். மாநாட்டில் அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். விரைவில் எங்களை முதல்வர் அழைத்துப் பேசுவார் என்று நம்புகிறோம்.

அப்போது, எங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து முதல்வரிடம் பேசுவோம். மமக திமுகவில் இணைந்தது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT