அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது அதிமுக நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதிமுக பிரமுகரான மாறன் என்பவர் நேற்று அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில் அமமுகவைச் சேர்ந்த 100 பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும் கட்சிக் கொடி மற்றும் கொடிக் கம்பங்களை சேதப்படுத்தினர். எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.