முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் | கோப்புப் படங்கள் 
தமிழகம்

‘‘இரும்புப் பெண்மணியை நினைவுகூர்வோம்’’- ஜெயலலிதா நினைவு தினத்தில் கங்கனா ரனாவத் அஞ்சலி

ஏஎன்ஐ

ஜெயலலிதா 5வது நினைவு தினத்தை முன்னிட்டு இரும்புப் பெண்மணி நினைவுகூர்கிறேன் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்த ஜெயலலிதா, 75 நாட்கள் பல்வேறு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவுதினத்தை தொடர்ந்து மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோர் மலரஞ்சலி வைத்து மரியாதை செய்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான 'தலைவி' திரைப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ள பாலிவுட் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவுக்கு தனது அஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஜெயலலிதாவின் படத்தை இன்று வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது:

''அம்மாவின் புண்யதிதியில் (நினைவுதினத்தில்) அந்த இரும்புப் பெண்மணி ஜெ.ஜெயலலிதாவை நினைவு கூர்கிறேன்'' என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT