தமிழகம்

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி கட்டாயம்: மீறுபவர்களுக்கு தண்டனை

சி.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து , புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில், “புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம், 1973 இன் பிரிவு 54(1) இன் விதியின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதுச்சேரியில் கோவிட் -19 க்கு உடனடியாக கட்டாய தடுப்பூசியை அமல்படுத்துகிறது.

இதை மீறுபவர்கள் சட்ட விதிகளின்படி, தண்டனை நடவடிக்கைக்கு பொறுப்பாவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனாவை, தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முன்னதாக புதுச்சேரியில் இனி, பொது இடங்களில் வருவதற்கு கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று புதுவை துணை நிலை ஆளு நர் தமிழிசை தெரிவித்துருந்தார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT