தமிழகம்

13-ம் கட்ட மெகா முகாமில் 21 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 13-ம் கட்ட மெகா முகாமில் 20 லட்சத்து 98 ஆயிரத்து 712 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 13-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உட்பட 50ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் செயல்பட்டது. முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.

பேருந்தில் அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன்இருந்தனர். முன்னதாக, காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அங்கு வந்த பேருந்தில் ஏறி, பயணிகளிடம் ‘தடுப்பூசி போட்டுவிட்டீர்களா?’ என்று விசாரித்து, தடுப்பூசியின் அவசியம் குறித்து அமைச்சர் விளக்கினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் நடந்த தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.மனிஷ், கல்லூரி முதல்வர் ஷனாஜ்உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

13-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 20 லட்சத்து 98 ஆயிரத்து 712 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம்பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (ஞாயிறு)விடுமுறை. தடுப்பூசி மையங்கள்இன்று செயல்படாது என்று சுகாதாரஅதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT