தமிழகம்

தவறான மின் இணைப்பால் வீட்டு மின்சாதனப் பொருட்கள் சேதம்: ‘உங்கள் குரலில்’ வாசகர் புகார்

செய்திப்பிரிவு

டிஜிட்டல் மீட்டர் பொருத்த வந்த மின்வாரிய ஊழியர்கள் தவறான மின் இணைப்பு கொடுத்ததால் வீட்டில் இருந்த மின்சாதனங்கள் அனைத்தும் சேதம் அடைந்துவிட்டன என வாசகர் ஒருவர் உங்கள் குரலில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, வேளச்சேரியை சேர்ந்த எஸ்.ஜெயராம் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரலில் தொடர்பு கொண்டு கூறியதாவது:

வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கடந்த மாதம் 3-ம் தேதி எனது வீட்டுக்கு புதிய டிஜிட்டல் மின் மீட்டரை மின்வாரிய ஊழியர்கள் மாற்றினார்கள். சிறிது நேரத்தில் எனது குழந்தை டிவியை ஆன் செய்தபோது செட்டாப் பாக்ஸ் வெடித்துவிட்டது. ஃப்ரிட்ஜ், ஹோம் தியேட்டர், டியூப் லைட் என அனைத்தும் செயலிழந்து விட்டன.

இது குறித்து ராஜ்பவன் மின் வாரிய உதவிப் பொறியாளரிடம் புகார் கூறியபின், ஊழியர்கள் வந்து பார்த்தனர். அப்போதுதான் அவர்கள் பேஸ் வயரை நியூட்ரலிலும், நியூட்ரல் வயரை பேஸிலும் மாற்றி இணைப்பு வழங்கியிருப்பது தெரியவந்தது. இவர்களது தவற்றால் எனது வீட்டில் சேதமான பொருட்களின் மதிப்பு இருபதாயிரம் ரூபாய். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் கேட்ட போது எந்தவிதமான பதிலும் தர வில்லை. பாதிக்கப்பட்ட எனக்கு மின் வாரியம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வாறு ஜெயராம் கூறினார்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி யிடம் கேட்டபோது, ‘‘டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெயராம் வீட்டில் நிகழ்ந்த தவறு குறித்து அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள் ளது. அவர்கள் அளிக்கும் விளக் கத்தைப் பொறுத்து உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT