தமிழகம்

பொதுத்துறை இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை: வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் கருத்து

செய்திப்பிரிவு

பொதுத்துறைகள் இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று அகில இந்திய வங்கி அதிகா ரிகள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் டி.தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வங்கி அதிகா ரிகள் கூட்டமைப்பு சார்பில், ‘பொதுத் துறைகளை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில், மாற்று ஊடக மைய உறுப்பினர்களின் விழிப்புணர்வு வீதி நாடகம் கடந்த ஜனவரி 31-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த கலைக்குழுவினர், தமிழகத் தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பொதுத் துறையால் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மைகள், அவற்றை தனியார்மயமாக்க முயலும் மத்திய அரசு, அதை தடுக்க வேண்டிய அவசியம் ஆகியவை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இக் குழுவின் பயணம் சென்னையில் நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழா தியாகராயநகரில் உள்ள கர்நாடக சங்கத்தில் நேற்று நடைபெற்றது.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் டி.தாமஸ் பிராங்கோ இதில் பங்கேற்று பேசியதாவது:

இது கலைப் பயணத்தின் நிறைவு விழா இல்லை. 2-ம் சுதந்திரப் போரின் தொடக்க விழா. நாட்டில் ஏழ்மை ஒழிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பின்மையை ஒழிக்க வேண்டும். விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைந்து வரும் நிலையில், நம்மால் அதை பயன்படுத்திக்கொண்டு, பொருளாதார வளர்ச்சியை பெற முடியவில்லை.

நமது பொருளாதார கொள் கையை உலக வங்கியும், சர்வ தேச நிதிநிறுவனங்களும் தீர்மானிக் கின்றன. கடந்த 25 ஆண்டு களாக தனியார் பெருமுதலாளி களுக்காகவே மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம் ஈட்டும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பதற்காக மத்திய அரசு துடித்துக்கொண்டிருக்கிறது.

பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டு களில் ரூ.60 ஆயிரம் கோடியை மூலதனமாக வழங்கியுள்ளது. ஈவுத் தொகையாக கடந்த 10 ஆண்டு களில் ரூ.64 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ளன. வரியாக வும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளன.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் விற்கப்பட்டால், வேலையில்லா பட்டதாரிகளின் நிலைமை இன்னும் மோசமாகும், இட ஒதுக்கீடு இல்லாமல் போகும், விவசாயிகளுக்கும், ஏழை மாணவர் களுக்கும் வங்கிக் கடன் கிடைக் காது. எனவே பொதுத்துறை இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

சிஐடியூ மாநிலச் செயலர் பி.சி.சுகுமாறன் பேசும்போது, “பொதுத் துறை பாதுகாப்பு என்பது அரசிய லோடு சேர்ந்தது. பாஜகவிடம், மாநிலங்களவையில் பெரும் பான்மை இல்லை. அதனால் நினைக் கும் சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை உடனடியாக தனியாருக்கு விற்க முடியவில்லை. அதனால் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பொதுத்துறை சேவைகள் எப்படி மக்களை சென்றடைகின்றன என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர் களை திரட்ட வேண்டும். அதே வேளையில் பொதுமக்களின் போராட்டங்களிலும் வங்கி அதிகாரிகள் பங்கேற்று, மாநிலங் களவையில் பாஜக பெரும்பான்மை பெறுவதை தடுக்க வேண்டும்” என்றார்.

விழாவில் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநில செயலர் ஆர்.சேகரன், மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெ.டி.ஷர்மா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகா ரிகள் சங்க பொதுச்செயலர் சீனி வாசன், அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சம்மேளனத்தை சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT