உடுமலைப்பேட்டையில் கலப் புத் திருமணம் செய்துகொண்ட இளைஞர் கொலை செய்யப் பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் நிலக்கோட்டை நீதிமன்றத் தில் நேற்று சரணடைந்தார்.
திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். பொறியியல் கல்லூரி மாணவரான இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் மாவட்டம், பழநி திருநகரைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் கவுசல்யா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவரும் சில நாட் களுக்கு முன் உடுமலைப்பேட் டைக்கு பொருட்கள் வாங்க சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி னர். இதில் சங்கர் இறந்தார். கவு சல்யா படுகாயத்துடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்.
இதுகுறித்து உடுமலைப் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ள னர். கவுசல்யாவின் தந்தை சின்னச் சாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை நீதிமன்றத்தில் கடந்த 14-ம் தேதி சரணடைந்தார்.
இந்நிலையில், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பழநியைச் சேர்ந்த வாசுதேவன் மகன் பிரசன்னா (20) நேற்று காலை நீதிபதி ரஜனா பர்வீன் முன்னிலையில் சரணடைந்தார். கல்லூரி மாணவரான இவரை மார்ச் 23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பிரசன்னாவை போலீ ஸார் மதுரை மாவட்டம் மேலூர் சிறையில் அடைத்தனர்.
இக்கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 5 பேர் மற்றும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக நேற்று உடுமலை மாஜிஸ்திரேட் முன்னிலையில், சிறையில் உள்ளவர்களை அழைத்து விசாரிக்க போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதி நடைபெறும் எனவும், இவர் களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் உத்தேசித் துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்விசாரணையின் மூலம் கொலைச் சம்பவத்தில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
வழக்கறிஞர் ஸ்டிக்கருடன் வலம் வந்த நபர்
இக்கொலையின்போது, திண் டுக்கல் பாலகிருஷ்ணாபுரத் தைச் சேர்ந்த குற்றவாளிகள் ஜெகதீசன் என்பவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாகத் தெரிகிறது. இக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்க ளுடன், 2 மோட்டார் சைக்கிள் களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அதில், ஜெகதீசன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளின் முகப்பில் வழக்கறிஞருக்கான ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருந்ததும், மற்றொரு மோட்டார் சைக்கிள் பதிவு எண் இல்லாமல் இருந்த தாகவும், அது கவுசல்யாவின் தந்தைக்கு சொந்தமானது என வும் போலீஸார் தெரிவித்தனர்.