தமிழகம்

தடுப்பூசி செலுத்தினால்தான் ரேஷன் பொருட்கள்: ஒரு வாரத்தில் அமல்படுத்த திட்டம்

செய்திப்பிரிவு

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தி யவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை ஒரு வாரத்தில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

ஒமைக்ரான் தடுப்பு முன் னேற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மடீட்சியா அரங்கில் நேற்று நடந்தது. ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், சுகாதாரத் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:

அரசின் உத்தரவுகளைப் பின் பற்றி பாதுகாப்பாக இருந்தால் ஒமைக்ரான் வைரஸில் இருந்து காத்து கொள்ளலாம். 11 நாடு களில் இருந்து மதுரைக்கு வருவோரை பரிசோதிக்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தடுப்பூசி போட்ட வர்களுக்கு மட்டும் பொருட்களை வழங்க உத்தரவிடுவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. இதற்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து திட்டத்தை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக்கில் மது வாங்கு பவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என்பது மதுரை மாவட்டத்தில் கட்டாயமாக்கப்பட் டுள்ளது. இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை உயரும்.

பொது இடங்களில் ஒரு தடுப்பூசி மட்டுமாவது போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இது குறித்து சோதனை நடத் தும்போது முதல்முறை சிக்கினால் எச்சரிக்கப்படுவர்.

மீண்டும் தடுப்பூசி போடாதது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.

மதுரை மாவட்டத்தில் 40 கிராமங் களில் 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நகரில் 4 குடியிருப்போர் சங்கங்களுக்கு கட்டுப்பட்ட பகுதி களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT