தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கில் திரைப்பட தணிக்கை வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மத்திய திரைப்பட தணிக்கை வாரிய முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் மண்டல அதிகாரியாக பதவி வகித்தவர் டி.ராஜசேகர். ஐஎப்எஸ் அதிகாரியான இவர், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் பணியாற்றிய போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2010-ல் சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

சிபிஐ விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக தன் பெயரிலும், திருவள்ளூர் மாவட்டம் அரிசி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் மனைவி யோகலட்சுமி பெயரிலும் ரூ.8 லட்சத்து 70 ஆயிரத்து 469 சொத்து சேர்த்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ வழக்குகளுக்கான 9 வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி கண்ணம்மாள், ராஜசேகருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அவரது மனைவி யோகலட்சுமிக்கு ஒராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் வருமானத்துக்கு அதிமாக சேர்த்த சொத்துsகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT