பொள்ளாச்சி அருகே அரசுப் பேருந்தும் - லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: பொள்ளாச்சியில் இருந்து தென்னை நார் ஏற்றிக்கொண்டு திருப்பூருக்கு லாரி ஒன்று நேற்று சென்றது. இதே போல், திருப்பூரில் இருந்து 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து பொள்ளாச்சிக்குச் சென்றது.
அப்போது, பொள்ளாச்சி - பல்லடம் சாலை, கருமாபுரம் பிரிவு அருகே பேருந்தும், பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், பேருந்து, லாரி உருக்குலைந்தன. இதில் பேருந்தில் இருந்த 5 வயது மற் றும் 7 மாத குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயங்களுடன் மீட்கப் பட்ட லாரி ஓட்டுநர், 3 பயணிகள் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 27 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவை, பொள்ளாச்சி அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து நெகமம் போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர். கருமாபுரம் பிரிவில் சாலை ஓரம், இயந்திரம் மூலமாக கிணறு தோண்டும்போது ஏற்பட்ட புகை நிரம்பிய சூழலே விபத் துக்கு காரணமாக இருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப் படுகிறது.