தமிழகம்

சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

பேராசிரியர் சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருது பெற்றதற்காகவும், பாரதி பாஸ்கர் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பியமைக்காகவும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருது பெற்றதற்காகவும், பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பியதற்காகவும் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்தச் சந்திப்பில் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, பாரதி பாஸ்கர் கணவர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதி பாஸ்கருக்குத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT