சிவகங்கை அருகே சோழபுரத் தில் ஊராட்சித் தலைவி, அவரது கணவரை முகமூடி கொள்ளை யர்கள் அரிவாளால் வெட்டினர். பின்னர் 13 பவுன் நகைகள், ஒன் றரை கிலோ வெள்ளிப் பொருட் கள் உள்ளிட்டவற்றை கொள்ளை யடித்துக் கொண்டு அவரது காரில் தப்பிச் சென்றனர்.
சிவகங்கை அருகே உள்ள சோழபுரத்தைச் சேர்ந்தவர் மாரி. அடகுக் கடை நடத்தி வரும் இவரது மனைவி லட்சுமி சோழ புரம் ஊராட்சித் தலைவியாக உள் ளார். நேற்று முன்தினம் இரவு ஆறு பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் மாடி வழியாக மாரியின் வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த மாரியை யும் அவரது மனைவி லட்சுமியை யும் எழுப்பியுள்ளனர். மாரியை அரிவாளால் கழுத்து, தலை, இடுப்பு ஆகிய இடங்களில் வெட்டி யுள்ளனர். மேலும் முக்கியமான பத்திரங்கள், ஆவணங்களைக் கேட்டுள்ளனர். லட்சுமி தர மறுக் கவே, அவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் பத்திரங் கள், ஆவணங்கள், பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ஒன் றரை கிலோ வெள்ளிப் பொருட் கள், ரூ.20 ஆயிரம், 2 செல்போன் கள் ஆகியவற்றை கொள்ளையடித் தனர். மேலும் தப்பிச் செல்வதற் காக காரின் சாவியைக் கேட்டு வாங்கியுள்ளனர். சத்தம் கேட்டு யாரும் வந்துவிடாமல் இருப்ப தற்காக மேலும் நான்கு பேர் வீட் டைச் சுற்றி நின்றதாகவும் தெரிய வருகிறது.
சத்தம் கேட்டு எழுந்த மாரியின் மூத்த மகன் மாயா, பின்வாசல் வழியாக வெளியே சென்று பக்கத் தில் இருந்த சந்திரன் என்பவரை அழைத்துள்ளார். அவர் பார்த்த போது கும்பல் காரில் தப்பியது.
வெட்டுக் காயமடைந்த மாரி, லட்சுமி ஆகியோர் மதுரை மருத் துவமனையில் சிகிச்சை பெறுகின் றனர். சிவகங்கை நகர் போலீ ஸார் விசாரிக்கின்றனர். முகமூடிக் கும்பல் எடுத்துச் சென்ற கார் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் படமாத்தூர் விலக்கில் நின்றது. அதை போலீ ஸார் பறிமுதல் செய்தனர்.