பாஜக அரசுக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடக்கும் பேரணியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் உறுப்பினர்களை கே. எஸ்.அழைகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை கண்டிக்கின்ற வகையில், மாபெரும் பேரணியை வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடத்துவதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததால், தற்போது பேரணி நடைபெறுகிற இடம் அதேநாளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் கலந்து கொள்வதற்கு 12 ஆம் தேதி ஜெய்ப்பூர் செல்ல வேண்டுமென்பதால் அதற்குரிய ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.