கோப்புப்படம் 
தமிழகம்

தூத்துக்குடியில் முதல்வர் இன்று ஆய்வு

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) ஆய்வு செய்கிறார்.

இதற்காக பகல் 12.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, 1.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். பின்னர், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, ராம் நகர் உள்ளிட்ட 5 இடங்களை பார்வையிடுகிறார்.

தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறார். பிறகுகார் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

முதல்வரின் வருகை குறித்து அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு, எஸ்பி ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து முதல்வர் ஆய்வு செய்யும் இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT