தமிழகம்

நகரப்புற உள்ளாட்சித் தேர்தல்; சென்னையில் மட்டும் 1,530 விருப்ப மனு: தமிழக காங்கிரஸ் கமிட்டி

செய்திப்பிரிவு

சென்னையில் மட்டும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில் 1,530 உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று (1.12.2021) புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை வழங்கினார்கள். இந்த மனுக்களை சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

மாவட்ட வாரியாக மனுக்கள் வழங்கியவர்களின் விபரம் :

1. வடசென்னை கிழக்கு பகுதியில் 270 விருப்ப மனுக்கள்
2. வடசென்னை மேற்கு பகுதியில் 240 விருப்ப மனுக்கள்
3. மத்திய சென்னை கிழக்கு பகுதியில் 210 விருப்ப மனுக்கள்
4. மத்தியசென்னை மேற்கு பகுதியில் 310 விருப்ப மனுக்கள்
5. தென்சென்னை கிழக்கு பகுதியில் 180 விருப்ப மனுக்கள்
6. தென்சென்னை மத்தி பகுதியில் 140 விருப்ப மனுக்கள்
7. தென்சென்னை மேற்கு பகுதியில் 180 விருப்ப மனுக்கள்
என சென்னையில் மட்டும் 1,530 மனுக்கள் பெற்றப்பட்டுள்ளன.

இவற்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் கோபண்ணா, கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், செந்தமிழ் அரசு, பொதுச்செயலாளர்கள் எஸ்.ஏ. வாசு, இல. பாஸ்கரன், இமயா கக்கன் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தமிழகத்தில் மீதமுள்ள 68 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களிலும் இன்றைக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்."

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT