புதுச்சேரியில் நடமாடும் பாலியல் தொழிலில் சிலர் ஈடுபடுவதாக சிறப்பு அதிரடிப்படை போலீ ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படை போலீஸார், பாலி யல் தொழிலில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரிடம், வாடிக்கையாளர் போல் பேசியதில், அந்தோணி தாஸ் (40) என்பவர் புதுச்சேரி 45 அடி ரோட்டை ஒட்டியுள்ள சுதந்திர பொன்விழா நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து நடமாடும் பாலியல் தொழிலை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று பங்களாதேஷை சேர்ந்த பெண் மற்றும் புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் என மொத்தம் 3 பேரை மீட்டனர். பின்னர் அனைவரையும் கோரிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாலியல் தொழில் நடத்தி வந்த அந்தோணி தாஸை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி னர்.
விசாரணையில், நடமாடும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படும் பெண்களை ஓரிடத்தில் மக்களோடு மக்களாக தங்க வைப் பார்கள். இவர்களின் செல்போன் எண்கள் புரோக்கர், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களிடம் இருக்கும். அவர்களை அணுகும் நபர்களிடம், செல்போன் நம்பரை கொடுத்து பேச வைப்பார்கள். சம்பந்தப்பட்ட பெண்கள் எங்கு வர வேண்டும்? எத்தனை நாட்கள் உடனிருக்க வேண்டும்? எவ்வளவு தொகை? என அனைத்தும் பேசி முடிப்பார்கள். இதனை ஏற்கும் வாடிக்கையாளர் சொல்லும் இடத்துக்கு அந்த பெண்களை கொண்டு சேர்ப்பர். வாடிக்கையாளர் பெண்ணை விரும்பும் இடத்துக்கு அழைத்துச் செல்வார். பிறகு மீண்டும் அந்த கும்பலிடம் ஒப்படைத்து விடுவார். இதற்கு ஒரு இரவு, பகலுக்கு ரூ.10 ஆயிரம் என தொகை வசூலித்துள்ளனர் என்பதும், பலரும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மீட்கப்பட்ட பங்களாதேஷ் பெண்ணிடம் பாஸ்போர்ட் உள் ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. மேற்குவங்கம் வழி யாக புதுச்சேரிக்கு அவரை அழைத்து வந்துள்ளனர் என தெரியவந்தது. பின்னர் மீட்கப்பட்ட 3 பெண்களையும் போலீஸார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.