தமிழகம்

மதுரை மாநகராட்சி 7-வது வார்டு அதிமுக கவுன்சிலர் தற்கொலை

செய்திப்பிரிவு

மதுரையில் சில நாட்களுக்கு முன் அதிமுக கவுன்சிலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மற்றொரு கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை செல்லூர் தாகூர் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜா(42). இவர், அப்பகுதி அதிமுக வட்ட செயலாளராகவும், 7-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்தார். இவரது மனைவி மீனாம்பிகை. இவர்களுக்கு மகன் ஆகாஷ், மகள் தமிழ் காவியா உள்ளனர். வழக்கறிஞர் படிப்புக்குப் படித்து விட்டு அதிமுகவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

இவரது கவுன்சிலர் அலுவலகம் அதே பகுதியில் இருக்கிறது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த அலுவலகத்தில் இவர் தூக் கிட்டு தற்கொலை செய்துகொண் டுள்ளார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, போலீஸா ருக்குத் தகவல் தெரிவித்தனர். செல்லூர் போலீஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

அவர் தற்கொலை செய்து கொண்ட அலுவலகத்தில் அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ளதாகவும், அதில் அவர் தனக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக வும் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறையால் கவுன்சிலர் அலுவலகத்தை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சாவியை வாங்கி வைத்துள்ளனர். பூட்டப் பட்ட அந்த அலுவலகத்தில் கவுன் சிலர் எப்படி இறந்து கிடந்தார் எனவும், உடல்நிலை சரியில்லை என்பதற்காக மட்டுமே அவர் தூக் கிட்டு தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை எனவும், அவரது தற்கொலையில் வேறு ஏதாவது அரசியல் காரணம் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின் றனர். அதனால், இறந்த கவுன்சி லருக்கு நெருக்கமான மற்ற கவுன்சிலர்கள், நண்பர்கள், உறவி னர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிர்வாகிகள் அதிர்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் அதிமுக கவுன்சிலர் விஜயராகவனை ஒரு ரவுடி கும்பல் வெட்டி படுகொலை செய்தது. அதற்கான காரணத்தை போலீஸார் கண்டுபிடிக்காத நிலையில் தற்போது மற்றொரு அதிமுக கவுன்சிலர் தூக்கிட்டு இறந்த இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் நேரத்தில் மதுரை அதிமுகவில் தொடரும் இந்த சோகங்கள் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT