செங்கல்பட்டு, நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கள் உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரவு விவரம்:
மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையராக இருந்த ஈஸ்வர், சென்னை புளியந்தோப்பு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்த எஸ்.ஆறுமுகசாமி, மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த மணிவண்ணன், சென்னை காவல் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார், சென்னை தென்மண்டலப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிஐடி சிறப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்தன், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.