கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி கூறுவது போல் வேறு எந்த பழமும் கனியவில்லை என்பதே எனது கருத்து. பெண்கள் வளர்ச்சி மாநாடாகவும், ஊழலை ஒழிப்பதற்கான மாநாடாகவும் தேமுதிக மகளிரணி மாநாடு அமைய வாழ்த்துக்கள்.
ஊழலற்ற, வளர்ச்சியை கொடுக்கக் கூடிய அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதே பாஜக விருப்பம். 2014 நாடாளுமன்ற தேர்தலையும் அப்படித்தான் சந்தித்தோம். பல்வேறு கட்சிகளுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதாலேயே பாஜக பலவீனமாக இருப்பதாக அர்த்தம் அல்ல. கூடுதலாக பலம் பெறவே கூட்டணிக்கு கட்சிகளை அழைக்கிறோம். கூட்டணி இல்லாவிட்டாலும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலையில் பாஜக வலுவாக இருக்கிறது என்று அவர் கூறினார்.