உடுமலையில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட பொறியியல் கல்லூரி மாணவரை வெட்டிக் கொன்ற கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுமலையில் காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்ட பொறியியல் பட்டதாரி மாணவர் சங்கர் (22), பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு பழநி, திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் தேடி வருகின்றனர். இந்நிலை யில், குமரலிங்கம் காவல் நிலை யத்தில் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் செய்தியாளர் களிடம் நேற்று கூறும்போது, ‘முக்கிய குற்றவாளிகளைப் பிடித்து விட்டோம். சட்டம் ஒழுங்கு கருதி அவர்களின் பெயர்கள், எத்தனை பேர் என்ற விவரங்களை வெளியிட முடியாது. நாளை (புதன்கிழமை) நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்ப் படுத்தப்படுவார்கள். வேறு எதுவும் இப்போது தெரிவிக்க முடியாது’ என்றார்.
வாட்ஸ்-அப்பில் பரபரப்பு
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் இது தொடர்பாக மதன், ஜெக தீசன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் புகைப்படங்கள் என 4 பேரின் படங்கள் வாட்ஸ்-அப்பில் வெளி யானதாலும் பரபரப்பு ஏற்பட் டது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, ‘இதுகுறித்து அலுவல்ரீதியாக எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது’ என்றார்.