மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வழங்கிய பாஜகவினர். 
தமிழகம்

பிரதமர் புகைப்படம் வைக்கக்கோரி மனு

செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் புகைப் படத்தை அரசு அலுவல கங்களில் வைக்கக்கோரி மதுரை ஆட்சியரிடம் மாநகர் பாஜக தலைவர் பா.சரவணன் தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் இருப்பதைப்போல், பிரதமர் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களிலும் பிரதமர் படத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் எனக்கோரி மாநகர் பாஜக தலைவர் பா.சரவணன், மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலட்சுமி உள்ளிட்டோர் ஆட்சியரிடம் பிரதமரின் படத்தை அளித்து கோரிக்கை வைத்தனர்.

SCROLL FOR NEXT