தமிழகம்

சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்: போக்குவரத்து ஆணையரகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, பொன்னான நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உதவிபுரியும்நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கும் திட்டத்தை மத்தியசாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்அறிவித்துள்ளது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அவசரகால உதவியை பொதுமக்கள் செய்ய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். ஓர் ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒருவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.

சாலை விபத்து நடந்த பிறகு,காவல் துறையினர் அந்த இடத்தைபார்வையிட்டு, விபத்தின் தன்மை குறித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பார்கள். அனைத்து விபத்துகளையும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் ‘மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு’ ஆய்வு செய்யும்.

இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகைக்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்.

தமிழக போக்குவரத்து ஆணையரகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT