தமிழகம்

ரூ.50 லட்சத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கடந்த தேர்தல்களை விட இம்முறை வாக்கு சதவீதத்தை உயர்த்தும் பணிகளை தமிழக தேர்தல் துறை தொடங்கியுள்ளது. குறிப்பாக, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்’ மூலமாகவும், கிராமப்புறங்களில் தியேட்டர்களில் திரைப்படத்துக்கு முன் வெளியிடப்படும் ‘ஸ்லைடு’ மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், கிரிக்கெட் நட்சத்திரங்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக் மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்த சித்தார்த், நயன்தாரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் வாக்களிக்க வலியறுத்தி குறும்படங்களில் இலவசமாக நடித்து கொடுத்துள்ளனர். இது தவிர, நடிகர் ரஜினிகாந்திடமும் தேர்தல் துறை பேசி வருகிறது. அவர் தற்போது ஓய்வில் இருப்பதால், விரைவில் நடித்து கொடுப்பார் என கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையமானது, தமிழகத்தில் தேர்தல் விளம்பரத்துக்காக ரூ.50 லட்சத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளதாம். அதை கொண்டே அச்சு ஊடகங்கள் மற்றும் எப்.எம். போன்றவற்றில் விளம்பரங்களை வெளியிட்டு வருவது எங்கள் சாதனை என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT